ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் 6 ஆவது காலாந்தர அறிக்கை கடந்த 2019 பெப்ரவரி 22 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, 6 ஆவது மீளாய்வு நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இம்முறை 6 ஆவது மீளாய்வு செயன்முறையானது இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவின் தலைமையில் கலப்பு வடிவத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here