பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது.

பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள் திடீரென மாயமாகி விடுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்து மற்றும் சீக்கிய இளம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் ஐ.நா. மனித உரிமைக் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here