ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் தொடங்கிய பின்னர் தனது இரண்டாவது வெளிநாட்டு பயணத்தில் அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

‘எங்கள் ஒத்துழைப்பின் இயக்கவியலை நாம் மேம்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்பாளரைக் காட்டிலும் வேகமாக அதைச் செய்ய வேண்டும்’ என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.

முன்னதாக பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவருக்கு கைத்தட்டல் வழங்கப்பட்டது.

பல ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஏற்கனவே போர் விமானங்கள் பற்றிய முடிவு ஒரு கூட்டு நடவடிக்கையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, மோதலில் நேரடி மற்றும் மறைமுக மேற்கத்திய ஈடுபாட்டிற்கு இடையிலான கோடு மறைந்து வருவதாக ரஷ்யா எச்சரித்தது.

நீண்ட காலத்திற்கு ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் உக்ரைன் விமானிகளுக்கு ஏற்கனவே உள்ள விமானங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரித்தானியா கூறியது.

போலந்தின் பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி, தனது நாடு நேட்டோவின் முழு அமைப்பிற்குள் மட்டுமே செயற்பட முடியும் என்று கூறினார், அதே நேரத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே இந்த பிரச்சினையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.

ஜெட் விமானங்களுக்கான உக்ரைனின் கோரிக்கையை விரைவாக பரிசீலிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா அழைப்பு விடுத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here