சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி தேசிய அரசியலுக்கு வந்துள்ள மோடி மீண்டும் பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள நரேந்திர மோடியின் உண்மை நிலை பிபிசியால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பிபிசி தயாரித்த குஜராத் குறித்த ஆவணப்படம் தமிழாக்கம் செய்யப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

ஆவணப்படத்தை பார்த்த பின்னர் கருத்து தெரிவித்த திருமாவளவன், சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே தற்போதுள்ள மிகப்பெரும் சவால் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here