துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 இணை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா உள்ளிட்ட பல நாடுகள் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் சிரியா எல்லையில் 42 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here