ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது.

மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள், உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுடன் வட கொரியாவின் ஆழமான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here