ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, பல தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை பாதிக்கும் மிக மோசமான குளிர்கால வானிலை இதுவாகும் என கூறப்படுகின்றது.

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக இராணுவ ஹெலிகாப்டர்கள் மலைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here