ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் அதிக அளவிலான புகையிலையை போலி சிகரெட்டுகளாக மாற்றி கடத்தியதாக கூறப்படுகிறது.

தங்கள் நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தப்பி ஓடிய உக்ரைனியர்கள், தொழிற்சாலைகளுக்குள்ளேயே முன்னரே தயாரிக்கப்பட்ட தங்குமிடங்களில் நெருக்கடியாக வாழ்ந்து வருவதாக பொலிஸ்துறை கூறியது.

அதிகாரிகள் சோதனையின் போது, 37.5 மில்லியன் யூரோக்கள், சொகுசு வாகனங்கள், நகைகள் மற்றும் பெரிய அளவிலான பணத்தை பறிமுதல் செய்தனர். 20க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலை கட்டடங்கள், கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

தொழிற்சாலைகள் தினமும் அரை மில்லியனுக்கும் அதிகமான சிகரெட் பாக்கெட்டுகளை தயாரிக்க முடியும், அவை ஸ்பெயின் மற்றும் வெளிநாடுகளில் விற்கப்பட்டன.

2021ஆம் ஆண்டின் இறுதியில் தெற்கில் செவில்லிக்கு அருகிலுள்ள கோழிக் கொட்டகையில் முதல் இரகசியத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு வலென்சியா பிராந்தியத்திலும், வடக்கில் லா ரியோஜாவிலும் மற்ற இரண்டு செயற்பாடுகளைக் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த கும்பல் பெரிய கஞ்சா தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் உற்பத்தியை பல்வகைப்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைக்கு ஐரோப்பிய பொலிஸ் முகவரம், யூரோபோல் உதவி கிடைத்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ரஷ்யாவின் பெப்ரவரி 2022ஆம் ஆண்டு படையெடுப்பிலிருந்து தப்பி ஓடிய ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் உக்ரைனிய அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 160,000க்கும் அதிகமானோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here