நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மாநில பொலிசாரும் மத்திய அமைப்புகளும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை ரோந்து செல்வது போன்ற பாரம்பரிய கண்காணிப்பை பொலிஸார் வலுப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் சீர்திருத்தம் காலாவதியான குற்றவியல் சட்டங்களை நீக்குதல், கடலோர மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்தும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here