மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.

 

பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பல்லவ்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

 

வழக்கமாக ஆயிரக்கணக்கில் வரும் பறவைகள் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகச் சுருங்கி விட்டதால் பறவை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து பறவைகள் கணக்கெடுப்பு குறித்து இன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here