நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

 

இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வருடாந்திர கூட்டம் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

 

அனைத்து மாநில பொலிஸ்துறை தலைவர்கள், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், துணை இராணுவப் படை உயர் அதிகாரிகள் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

நேற்று இக்கூட்டத்தைத் ஆரம்பித்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைத் தாண்டி கடத்தி வரப்படும் போதைப் பொருள்களுக்கு எதிரான யுத்தம் நடத்தும் படி வலியுறுத்தினார்.

மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களும் போதைப் பொருள்களும் எல்லை வழியாக கடத்தி வரப்படுவதைத் தடுக்க வலியுறுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here