சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

தேசிய பிறப்பு வீதம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதனை காட்டும் புள்ளி விபரங்கள், 1,000 பெண்களுக்கு 6.77 பிறப்புகள் உள்ளதாக காட்டுகின்றன.

2022இல் மக்கள் தொகை 1.4118 பில்லியன் என கூறப்படுகின்ற நிலையில், இது 2021ஆம் ஆண்டில் இருந்து 850,000 குறைந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 7.52 ஆகக் குறைந்துள்ளது என்று சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறப்புகள் கடந்த ஆண்டு முதல் முறையாக பிறப்புகளை விட அதிகமாக பதிவாகியுள்ளது. இது கடந்த 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக இறப்பு வீதத்தை பதிவு செய்துள்ளது

1,000 பேருக்கு 7.37 இறப்புகள் என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய ஆண்டில் 7.18ஆக இருந்தது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here