குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் ஜெய்ஷ் இ முகம்மது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் கடந்த 2016இல் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப் படை தளம் மீதான தாக்குதல் என்பன இதில் அடங்கும்.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது, கோயில் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறும் எதிர்வரும் டிசம்பர் 21 மற்றும் அடுத்த ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையில் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதன் பிறகு கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here