உகண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் ஸ்பாக் என்ற தேவாலயத்தில் திடீரென குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.