லண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

லை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 16:00 மணிக்குக்கு சற்று முன்னர், லண்டனில் உள்ள பார்னெட்டில் கார் நிறுத்தப்பட்டதை அடுத்து, 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

யூஸ்டனில் உள்ள புனித அலோசியஸ் தேவாலயத்தில் சனிக்கிழமை பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 12 வயது சிறுமி மற்றும் நான்கு பெண்கள் காயமடைந்தனர்.

ஏழு வயது குழந்தை நிலையாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபீனிக்ஸ் வீதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் சுமார் 13:30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நினைவுச் சேவையின் போது சந்தேக நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here