பாஜகவின் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது.

முதல்நாளான இன்று பிரதமர் மோடி, டெல்லியில் திறந்த வாகனத்தில் பேரணி செல்கிறார். இதனால், டெல்லி நகர வீதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில், இந்த கூட்டத்தில் பாஜக முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட 350 பாஜக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்கிறார். அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பாஜக தேசிய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை நீடிக்க ஒப்புதல் அளிக்கவும், இந்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக நம்பப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here