டெல்லியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் முதல் இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கும் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here