சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்வடைந்துள்ளது.

 

65 பேர் உயிரிழந்தாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளதாகவும் 26 பேரைக் காணவில்லை எனவும் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதேவேளை, நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்டுவில் கடுமையான கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டுகளை அந்த நகர நிர்வாகம் அமுல்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here