முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு தலைமை தங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி 500 பக்க அறிக்கையை கையளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆறுமுகசாமி, ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறினார்.

எனவே அழைத்துச் சென்ற விடயம் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இந்த அறிக்கை, சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும் முன்னர் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here