ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தத்தின் கீழ் தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் கப்பல் உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் தகவல்படி, கப்பல் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை ஒடேசாவின் தெற்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரேனிய துறைமுகங்களை முற்றுகையிட்டு வருகின்றது. இந்த நிலையில் இரு தரப்பினரும் ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்க உடன்படிக்கை ஒன்றை அண்மையில் செய்து கொண்டனர்.

ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தம்: உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள தானிய கப்பல் | Contract Russia Grain Shipping Ukrainian Ports

உலகளாவிய உணவு நெருக்கடி

இந்த ஒப்பந்தம் உலகளாவிய உணவு நெருக்கடியை குறைக்கும் மற்றும் தானியங்களின் விலையை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

சியரா லியோனின் கொடியுடன் கூடிய ரசோனி என்ற கப்பலானது லெபனானில் உள்ள திரிபோலி துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று துருக்கி கூறியுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் மேலும் தானிய ஏற்றுமதிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ் இஸ்தான்புல்லில் அமைக்கப்பட்ட கூட்டு ஒருங்கிணைப்பு மைய தகவல்படி, சுமார் 26,000 தொன் சோளத்தை தாங்கிய கப்பல், இன்று துருக்கிய கடற்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தம்: உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள தானிய கப்பல் | Contract Russia Grain Shipping Ukrainian Ports

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், கப்பல் புறப்பட்டதை வரவேற்றதுடன், ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் துருக்கியின் பங்கை பாராட்டியுள்ளார்.

இந்தநிலையில் “இன்று உக்ரைன், ஆதரவு நாடுகளுடன் சேர்ந்து உலகப் பசியைத் தடுக்க மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் முகப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் தரவுகள்

உக்ரைனின் தானிய முற்றுகை காரணமாக, உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரொட்டி மற்றும் பஸ்தா போன்ற கோதுமை அடிப்படையிலான பொருட்கள் விலை உயர்ந்தன, மேலும் சமையல் எண்ணெய்கள் மற்றும் உரங்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.

ரஷ்யாவும் உக்ரைனும் கூட்டாக உலக கோதுமை விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்கின்றது.

2019 ஆம் ஆண்டில் உக்ரைன் உலகின் சோள விநியோகத்தில் 16% மற்றும் சூரியகாந்தி எண்ணெயில் விநியோகத்தில் 42% உற்பத்தியை கொண்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் தரவுகள் கூறுகின்றன.

ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தம்: உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள தானிய கப்பல் | Contract Russia Grain Shipping Ukrainian Ports

சர்வதேச தலைவர்கள் கப்பலுக்கு எச்சரிக்கையுடன் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இதை “ஒரு முக்கியமான முதல் படி” என்று கூறியுள்ளார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஸ்டானோ, உலகம் முழுவதும் உக்ரேனிய ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்க “முழு ஒப்பந்தமும்” நிறைவேற்றப்படுவதை ரஷ்யா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், கப்பல்கள் போக்குவரத்தில் இருக்கும்போது துறைமுகங்களை தாக்குதல்களுக்காக குறிவைக்க வேண்டாம் என்பதை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here