சென்னையின் 2ஆவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொழில் நிறுவனங்களின் அமைவிடம், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க மாநில அரசு பரிந்துரை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையக் கொள்கையின் படி, இறுதி செய்யப்பட்ட இடம் குறித்த முன்மொழிவை மாநில அரசு விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வி.கே.சிங் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here