ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றது என பிரித்தானியாவின் காலநிலை மற்றும் வானிலை குறித்த வானிலை அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கின்றது.

அதேவேளை, வசந்த காலம் முன்னதாகவே வரப்போகிறது என்றும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விரைவாக வளர்ச்சியடையவில்லை என்றும் பாதுகாவலர்கள் எச்சரிக்கின்றனர்.

காலநிலை மாற்றம் பிரித்தானியாவை பாதிக்கும் வழிகளை அறிக்கை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

வானிலை அலுவலகம், 2021ஆம் ஆண்டிற்கான காலநிலை மற்றும் வானிலை நிகழ்வுகளை மதிப்பிட்டது, இதில் புயல் அர்வென் போன்ற அழிவுகரமான வெள்ளத்தை ஏற்படுத்தியது.

1990ஆம் ஆண்டு முதல் கடல் மட்டம் சுமார் 16.5செ.மீ உயர்ந்துள்ளது. ஆனால் உயரும் வீதம் அதிகரித்து வருவதாக வானிலை மையம் கூறுகிறது.

அவை இப்போது ஆண்டுக்கு 3-5.2 மிமீ அதிகரித்து வருகின்றது. இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த அதிகரிப்பு வீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இது கடற்கரையின் பல பகுதிகளை சக்திவாய்ந்த புயல் மற்றும் காற்றுக்கு வெளிப்படுத்துகிறது, சுற்றுச்சூழலையும் வீடுகளையும் சேதப்படுத்துகிறது. சுமார் 500,000 வீடுகள் வெள்ளத்தால் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here