தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கில் 2ஆம் நாளாக இன்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அத்தோடு ஆட்சியில் இல்லாத தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here