தமிழக அரசு, மக்கள் நல திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதில்லை என  சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் நல திட்டங்களை செயற்படுத்த கால அட்டவணையை மட்டுமே தமிழக அரசு முடிவு செய்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தில் நிலக்கீழ் வடிகாலமைப்பை அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

அத்தோடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கால அவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை விசாரணைக்கு ஆஜராகாத அதிகாரிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here