டென்மார்க்கின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இறந்தவர்களில் 40 வயதுடைய ஒருவரும் இரண்டு இளைஞர்களும் அடங்குவதாகக் கோபன்ஹேகன் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சோரன் தாமஸ்சென் தெரிவித்தார்.
மொத்தம் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை, ஆனால் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறினார். மாலை 6 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக 22 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘hங்கள் கைது செய்தவர் குற்றவாளி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவர் தனது கைவசம் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார், மேலும் அந்த துப்பாக்கிக்கான தோட்டாக்களையும் அவர் வைத்திருந்தார்’ எனக் கூறினார்.
டென்மார்க்கில் துப்பாக்கி வன்முறை என்பது ஒப்பீட்டளவில் அரிதானது. சிட்னி பல்கலைக்கழகம் வைத்துள்ள துப்பாக்கி வன்முறைத் தரவுகளின்படி, டென்மார்க்கில் ஆண்டுதோறும் 100,000 பேருக்கு ஒரு துப்பாக்கி மரணம் ஏற்படுகிறது,