
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் போர்க்கப்பல்களைக் களமிறக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பார்லி போன்ற உணவுப்பொருட்களுக்காகப் பல ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் காத்துக்கொண்டிருக்க, ரஷ்யப் போர்க்கப்பல்களோ, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து உணவு, தானியங்கள் வெளியே வரமுடியாதபடி கருங்கடல் பகுதியில் தடையாக நின்று கொண்டிருக்கின்றன.
ரஷ்யா கருங்கடல் பகுதியில் நிறுத்தியுள்ள கப்பல்களிடமிருந்து, உணவு தானியங்களை வெளியே கொண்டு வரும் கப்பல்களை பாதுகாப்பதற்காக, அவற்றுடன் பயணிப்பதற்காக, போர்க்கப்பல்களை கருங்கடல் பகுதிக்கு அனுப்ப தனது நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.