அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுடைய ஒருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று அம்மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

13 குழந்தைகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இருப்பினும் செல்லும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பல தசாப்தங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் 19,350 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்த ஆண்டு இதுவரை 212 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here