சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று இலங்கைப் படகுப் பயணிகளை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் தடவையாக இலங்கைப் படகுப் பயணிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் தினத்தில் அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் இலங்கையர்கள் பிரவேசித்த காரணத்தினால், இந்த சம்பவம் தொடர்பில் லிபரல் கட்சி பிழையான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக தொழிற்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நாடு கடத்தப்படுவர் என்ற கொள்கையில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here