இலங்கையைப் போன்றதொரு நிலைமையை நோக்கி பாகிஸ்தான் சென்றுகொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

தனது கட்சியின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் அதை அழித்துவிட்டது,

டொலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் வீழ்ச்சியானது விலை உயர்வாக உள்ளது.

எனவே இலங்கையைப் போன்ற நிலையை நோக்கி பாகிஸ்தான் செல்கிறது என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்

பாகிஸ்தான் இலங்கையாக மாறும்! எச்சரிக்கும் இம்ரான் கான்!எனவே நாட்டில் உடனடித் தேர்தலே ஒரே தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் அடிமை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தான், இலங்கையாக மாறும் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ரஷீட் அஹமட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையாக மாறும்! எச்சரிக்கும் இம்ரான் கான்!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here