இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது.

இந்தநிலையில், கடனை திருப்பிச் செலுத்த தவறிய நொறுங்கிய இலங்கையை இயல்புக்கு கொண்டு வருமாறு சார்க் அமைப்பின் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் தலைவர் இப்திகார் அலி மாலிக் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையாக மாறாது!  சார்க் வர்த்தக அமைப்பின் தலைவர் உறுதி!இலங்கையின் முக்கிய வருவாயின் ஆதாரமான சுற்றுலாத் துறையை கொரோனா நோய் மோசமாக பாதித்துள்ளது,

இதுவே இலங்கையை திவால் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

எனவே இலங்கையை மொத்த வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற முன்வருமாறு சார்க் உறுப்பு நாடுகள் உட்பட உலக நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

50 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்காக இலங்கை முயற்சித்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையாக மாறாது!  சார்க் வர்த்தக அமைப்பின் தலைவர் உறுதி!இந்தநிலையில் வலிமையான விவசாயப் பொருளாதாரம் மற்றும் முறைசாரா பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், பாகிஸ்தான் ஒருபோதும் இலங்கையாக மாறாது என்று சார்க் அமைப்பின் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் தலைவர் இப்திகார் அலி மாலிக் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here