இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று ‘இந்தியாவுக்கான திட்டங்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற நிலையில்,ஐரோப்பிய அதிகாரிகள் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவிக்கையில்,

நான் சில ஐரோப்பிய அதிகாரிகளிடம் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் மாறிவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். எதையும் கேட்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்போது (இந்திய அரசிடமிருந்து) என்ன உத்தரவு கிடைக்கிறதோ அதை எங்களிடம் அப்படியே தெரிவிக்கின்றனர்.

இந்திய வெளியுறவுத்துறையை பகிரங்கமாக குற்றம்சாட்டிய ஐரோப்பிய அதிகாரிகள்எங்களிடமிருந்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் ஐரோப்பிய அதிகாரிகள் என்னிடம் கூறுகின்றனர். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here