கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணுவ வெற்றிகள் மிகவும் தற்காலிகமானவை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் மீள திருப்பி தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நாடு இன்னும் இரத்தக்களரி சண்டையை காணும் என உக்ரைன் ஜனாதிபதி உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இராஜதந்திரத்தால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணுவ வெற்றிகள் மிகவும் தற்காலிகமானவை.

ரஷ்யாவின் வெற்றி தற்காலிகமானது - உக்ரைன் ஜனாதிபதி சபதம்கிரிமியா அல்லது டான்பாஸ் ஆக்கிரமிப்பு – மிகவும் தற்காலிகமானது. இந்த பகுதிகள் ரஷ்யாவிடம் இருந்து விரைவில் மீளப்பெறப்படும் என உக்ரைன் ஜனாதிபதி சபதமிட்டுள்ளார்.

இதேவேளை, உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் கூறி தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெற்றி தற்காலிகமானது - உக்ரைன் ஜனாதிபதி சபதம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here