கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கிய நிலையில் அங்கு உரையாற்றிய போதே சோனியா காந்தி இந்த கோரிக்கையை விடுத்தார்.

கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்சியில் மாற்றங்கள் செய்யவேண்டியது காலத்தின் தேவை என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, இதற்கு செயன்முறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here