பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள எலிசபெத் போர்ன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரான்சுக்கு பெண் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் ஆளும்தரப்பு வெற்றி பெற்றால் தான், புதிய அரசாங்கத்தை எலிசபெத் போர்ண் அமைக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

மையவாத அரசியல் தளத்தைகொண்ட 61 வயதான எலிசபெத் போர்ன் அரச தலைவர் இம்மானுவேல் மக்ரனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது பதவியேற்பையடுத்து கருத்துத்தெரிவித்த அவர், தனது பதவியை பிரான்சில் உள்ள அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பிரான்சுவா மித்ரோன் அரச தலைவராக இருந்தபோது எடித் கிரெஸன் பிரதமராக பதவி வகித்த பின்னர் பிரதமர் பொறுப்பு வந்துள்ள இரண்டாவது பெண்ணாக போர்ன் பதிவாகியுள்ளார்.

மக்ரனும் போர்னும் இணைந்து எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சரவையை நியமிக்க இருந்தாலும், அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரன் தரப்பு ஆட்சியமைக்க கூடிய வகையில் வெற்றிபெற்றால் எலிசபெத் போர்ன் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிக்க முடியும்.

இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் கல்வடோ பகுதியில் போட்டியிடுவதை போர்ன் இன்று உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here