தெற்கு லண்டனில் காணாமல் போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எல்தம் பகுதியில் கடந்த புதன்கிழமை பேருந்தில் இருந்து இறங்கியதாகக் கூறப்படும் மாணவன் ஜேமி டேனியல், வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனையடுத்து, பெற்றோர் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

அதே நாள் காட்டுப்பகுதியில் பேச்சுமூச்சற்ற நிலையில் இளைஞன் ஒருவரை கண்டெடுத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞர் ஒருவரை மீட்டுள்ளதுடன், ஜேமி டேனியல் மரணமடைந்துள்ளதை உறுதி செய்தனர்.

அவரது மரணம் தொடர்பில் தற்போது தகவல் எதனையும் வெளியிட முடியாது எனக் கூறிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here