ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார்.

1971ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது ஜனாபதி ஷேக் முகமது பின் சயீது ஆவார்.

இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here