கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்றதை தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் – Mississaugaவில் தமிழர் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு December இல் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தால் மோதப்பட்டார்.

எனினும், பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல், சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வாகன சாரதி தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் தர்மகுலசிங்கம் டிசம்பர் 24ம் திகதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்த விசாரணையை அடுத்து 38 வயதான Luke Conklin என்பவர் மீது Toronto பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேகநருக்கு எதிராக விபத்தை ஏற்படுத்திய பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், Luke Conklin ஜூலை மாதம் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.     கனடாவில் உயிரிழந்த இலங்கை தமிழர் - விபத்தை ஏற்படுத்திய சாரதி கைதுகனடாவில் உயிரிழந்த இலங்கை தமிழர் - விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here