வேலூர் மத்திய சிறையில் 14 ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சிறைக் கைதிகள் உரிமை மையம் அவசர மனு அனுப்பியுள்ளது.

வேலூா் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து தண்ணீர் கூட அருந்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது நிலை குறித்து அரசியல் தலைவர்களும் முதல்வரிடம் வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக் கைதிகள் உரிமை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here