ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் அபிவிருத்திகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பொதுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரு மாத அமைதியான ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இந்த சம்பவம் மேலும் வன்முறையைத் தூண்டியதை அவதானிக்க முடிந்தது, சில தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இருந்தபோதிலும், இலங்கையர்கள் தங்கள் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்துகின்றனர்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட உயிர் இழப்பு மற்றும் அதிக எண்ணிக்கையிலான காயமடைந்த நபர்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கவும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

“ஐரோப்பிய ஒன்றியம் வன்முறையில் இருந்து விலகி நிதானத்தைக் காட்டுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது,

அனைத்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இலங்கையர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

கோவிட் நெருக்கடி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சவால்களைக் கையாள்வது உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் மக்கள் பாதிப்படைவதை குறைப்பதற்கான வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் ஐரோப்பி ஒன்றியம் மேலும்தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here