இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது.

அடக்குமுறை, பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல், திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த மஹிந்த இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது.

ஆனாலும் கடல் வழியாக அவா் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2009 ஈழப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழா்களை படுகொலை செய்தவா்கள் ராஜபக்ஷ சகோதரா்கள். அவா்களின் போா்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அத்தகைய போா்க் குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here