கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது.சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் யு.எஸ்.எஸ். போர்ட் றோயல், டிகோண்டெரோகா வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை கப்பல் சென்றதாக அமெரிக்க கடற்படை கூறியது.

தனது சுயமாநிலமாக சீனா கருதும் தாய்வானைச் சுற்றி தொடர்ந்தும் ரோந்து பணிகளில் அமெரிக்க கடற்படையும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, 18 போர் விமானங்களை தாய்வானின் வான் பரப்பிற்குள் சீனா ரோந்து நடவடிக்கைக்காக அனுப்பியது.ஜனவரி மாதம் 39 விமானங்களை அனுப்பிய பின்னர் ரோந்து நடவடிக்கைக்காக சீன கூடுதல் விமானங்கள் தாய்வானுக்குள் அனுப்புவது இது இரண்டாவது தடவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here