தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சிறைக் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 43 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஈக்குவடோர் தலைநகர் குயிட்டோவிலிருந்து கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாண்டோ டொமிங்கோவில் உள்ள சிறைச்சாலையில் இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது
சம்பவத்தில் குறைந்தது 43 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
மோதலின் பின்னர் 108 கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில ஈக்குவடோரின் சில பகுதிகளில் அவசர கால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.