கனடாவில் எட்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போயுள்ள இளைஞர் தொடர்பில் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.
வெங்கடேஷ் கண்ணதாசன் என்ற 31 வயதான இளைஞரே கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞர் தொடர்பில் அவரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டு ரொறன்ரோ பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.
இவர் 6 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், தாடி,மூக்கு கண்ணாடி அணிந்திருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெங்கடேஷை காணவில்லை என நேற்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.