மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைனும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

ரஷ்யாவினால் மரியுபோலில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.குறித்த பகுதியிலுள்ளஉக்ரைன் பாதுகாப்பு தரப்பினரை சரணடையக் கோரி, ரஷ்யா அங்குள்ள இரும்பு தொழிற்சாலையை முற்றுகையிட்டிருந்தது.

இந்நிலையில் அங்குள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இறுதியாக மீட்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல்கள் தெளிவாகவில்லை.

எனினும் மனிதாபிமான ரீதியிலான மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டதாக உக்ரைன் பிரதமர் அறிவித்துள்ளார்.

அத்துடன் மீட்கப்பட்ட மக்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரும்பு தொழிற்சாலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here