ரஷ்யாவை சேர்ந்த சுலைமான் கெரிமோவ் என்பவருக்குச் சொந்தமான 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொகுசுப் படகு பிஜியில் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகளை மீறியதற்காகவும் ஊழலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தொடர்புகளுக்காகவும் அமெரிக்க நீதித்துறை கோரிக்கை விடுத்ததை அடுத்து குறித்த படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு சிறைபிடிக்கப்பட்ட போது லௌடோகாவில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், 348 அடி (105 மீட்டர்) நீளம் கொண்டதுடன், எட்டு அறைகள், ஒரு விஐபி ஸ்டேட்ரூம் மற்றும் ஹெலிபேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “ரஷ்ய ஆட்சியை செயல்படுத்தும் குற்றவாளிகளின் சொத்துக்களுக்கு எந்த மறைவிடமும் இல்லை” என்பதை திணைக்களம் தெளிவுபடுத்த விரும்புகிறது என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லேண்ட் தெரிவித்துள்ளார்.

கெரிமோவ் ரஷ்யாவின் காஸ்ப்ரோமின் பகுதி உரிமையாளர் என்பதுடன் ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரியாவார்.

அவர் “ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து ஊழல் மற்றும் கிரிமியா ஆக்கிரமிப்பு உட்பட உலகெங்கிலும் உள்ள அதன் மோசமான செயல்பாடுகள் மூலம் லாபம் ஈட்டும்” தன்னலக்குழுக்களின் ஒரு பகுதியாக அமெரிக்கத் துறையால் விவரிக்கப்பட்டுள்ளார்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here