கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவ ஜெனரல் வலேரி ஸலுஸ்னி தெரிவித்துள்ளார்.

ஸ்மினி (பாம்பு) தீவு அருகே ரஷ்யாவின் ராப்டார் பிரிவு படகு இரண்டை, ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதாக அவர் தெரிவித்தார். எனினும், இதுகுறித்து ரஷ்யா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, கிழக்கு டோன்யெட்ஸ்க் பகுதியில் வான் வழித் தாக்குதலில் உக்ரைனின் மிக்-29 ரக போர் விமானத்தை அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வான்படை இரண்டு ஏவுகணைகளையும் 10 ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பு அதிகாரி இகோர் கொனேக்ஸேகோப் மேலும் தெரிவித்தார்.

இதுதவிர, உக்ரைனில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here