பிரித்தானியாவில் இருந்து யாழ்.பருத்தித்துறைக்கு சென்ற பெண் ஒருவர் இந்தியாவிற்கு சென்ற நிலையில்,தொடர்ச்சியாக குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் (கலாநிதி பிரபாகரன்) இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த 84 வயதுடைய பெண் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருக்கலாம் அல்லது புலம்பெயர் தேசத்தில் வேறு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.