உக்ரைன் எல்லைக்கு வடக்கே சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் மூன்று பாரிய சத்தங்களை தாம் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கிராமப்புற குடியிருப்பு பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கு தீப்பிடித்து எரிவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் பொதுமக்கள் மத்தியில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது