மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா நகருக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்ததாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் கூறியுள்ளார்.

ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS வெளியிட்ட இந்த செய்தியின் உண்மைத்தன்மை மற்றும் ஏதேனும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை செய்திகள் வெளியாகவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்ய விமானப் பிரிவுகள் உக்ரேனிய இராணுவத் துருப்புக்கள் மற்றும் பல இடங்களைத் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here