சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று அதிகாலை வொசிங்டன் சென்றடைந்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
சர்வதேச நாணய நிதியத்துக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை காலை நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்படவுள்ளது.
அந்த குழுவில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அடங்குகின்றனர்.
அமெரிக்காவின் – வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.